NZ_UAE_ALT

2-வது வெற்றியை நோக்கி நியூஸிலாந்து

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடை​பெறும் லீக் ஆட்​டத்​தில் ‘டி’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள நியூஸிலாந்து – ஐக்​கிய அரபு அமீரக அணி​கள் மோதுகின்​றன.

மிட்​செல் சாண்ட்​னர் தலை​மையி​லான நியூஸிலாந்து அணி தனது முதல் ஆட்​டத்​தில் இதே மைதானத்​தில் ஆப்கானிஸ்​தான் அணியை 5 விக்​கெட்​கள் வித்தியாசத்தில் வீழ்த்​தி​யிருந்​தது. அந்த ஆட்​டத்​தில் 183 ரன்​கள் இலக்கை துரத்​திய நியூஸிலாந்து அணி 13 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்​டிருந்​தது.

14 ரன்​களுக்கு 2 விக்​கெட்​களை இழந்த நிலை​யில் டிம் ஷெய்​பர்ட் 65 ரன்​களும், கிளென் பிலிப்ஸ் 42 ரன்​களும் விளாசி அணி​யின் வெற்​றி​யில் முக்​கிய பங்கு வகித்திருந்தனர். இவர்​களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த திறன் வெளிப்​படக்​கூடும். அதேவேளை​யில் ஃபின் ஆலன், ரச்​சின் ரவீந்​திரா ஆகியோர் பார்​முக்கு திரும்​புவ​தில் கவனம் செலுத்​தக்​கூடும்.

ஐக்​கிய அரபு அமீரக அணி​யில், கேப்​டன் முகமது வசீம், அதிரடி ஆட்​டக்​காரர் அலிஷான் ஷரஃபு மற்​றும் அனுபவ​மிக்க வேகப்​பந்து வீச்​சாளர் ஜுனைத் சித்​திக் போன்ற சில அனுபவ​மிக்க வீரர்​கள் பலம் சேர்ப்​பவர்​களாக உள்​ளனர். இதில் முகமது வசீம் சர்​வ​தேச டி 20 அரங்​கில் 84 போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களை குவித்து சாதனை படைத்தவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top