Naman

குத்துச்சண்டை அரை இறுதியில் நமன், அன்ஷுல்

பாங்காக்

தாய்லாந்தின் பாங்காக் நகரில் தாய்லாந்து ஓபன் சர்வதேச குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 90 கிலோ எடை பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் நமன் தன்வார் 4-1 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் ஜூராபோவ் எலியோர்பெக்கை தோற்கடித்து அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

90+ கிலோ எடை பிரிவில் இந்தியாவின் அன்ஷுல் கில் 3-2 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் ருஸ்டமோவ் அப்துராக்மோனை வீழ்த்தி அரை இறுதி சுற்றில் கால்பதித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top