Msd

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் எம்.எஸ்.தோனி

லண்டன்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் விளையாட்டுக்கு சிறந்த முறையில் பங்களிப்பு அளித்த ஜாம்பவான்களின் சாதனைகளை போற்றும் வகையில் ‘ஹால் ஆஃப் ஃபேம்’ அங்கீகாரத்தை ஐசிசி வழங்கி வருகிறது.

இந்த வகையில் இந்த ஆண்டு எம்.எஸ்.தோனி, தென் ஆப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித், ஹசிம் ஆம்லா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன், நியூஸிலாந்தின் டேனியல் வெட்டோரி ஆகியோருக்கும் மகளிர் பிரிவில் பாகிஸ்தானின் சனா மிர், இங்கிலாந்தின் சாரா டெய்லர் ஆகியோருக்கும் ‘ஹால் ஆஃப் ஃபேம்’ அங்கீகாரத்தை ஐசிசி வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top