Sanju Samson

சஞ்சு சாம்​சன் மீது மோர்​கல் நம்பிக்கை

நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அதிரடியாக விளையாடி மிரட்டி வருகின்றனர். ஆனால் தொடக்க வீரர்களில் ஒருவரான சஞ்சு சாம்சன் இதுவரை 16 ரன்களே எடுத்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு ஆதரவாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: சஞ்சு சாம்​சன் நம்​பிக்​கை​யைப் பெறு​வதற்​கும், ஃபார்மை மீண்​டும் பெறு​வதற்​கும் ஒரே ஒரு சிறந்த ஆட்​டம் மட்​டுமே தேவை.

உலகக் கோப்பை தொடரையொட்டி சரி​யான நேரத்​தில் வீரர்​களின் உயர்​மட்ட செயல்​திறனைக் கண்​டறிவது முக்​கி​யம். சஞ்சு சாம்​சன் நன்​றாகப் பயிற்சி செய்​கிறார், பந்தை நன்​றாக விளாசுகிறார். உலகக் கோப்பை தொடர் தொடங்​கு​வதற்கு முன்பு எங்​களுக்கு இன்​னும் இரண்டு ஆட்​டங்​கள் உள்​ளன. இதனால் சஞ்சு சாம்​சன் தனது ஃபார்​மைக் கண்​டு​பிடிப்​பார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top