madison keys

யுஎஸ் ஓபன் மேடிசன் கீஸ் ஷாக் தோல்வி

நியூயார்க்

யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆடர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 67-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ரெய்லி ஒபல்காவை எதிர்த்து விளையாடினார். இதில் அல்கராஸ் 6-4, 7-5, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

renata
யுஎஸ் ஓபனில் மேடிசன் கீஸை வீழ்த்திய மகிழ்ச்சியில் மெக்சிகோவின் ரெனாட்டா ஜராசுவா.

மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 6-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் மேடிசன் கீஸ், 82-ம் நிலை வீராங்கனையான மெக்சிகோவின் ரெனாட்டா ஜராசுவாவுடன் மோதினார். 3 மணி நேரம் 10 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரெனாட்டா ஜராசுவா 6-7 (10-12), 7-6 (7-3), 7-5 என்ற செட் கணக்கில் மேடிசன் கீஸை வீழ்த்தி 2-வது சுற்றில் கால்பதித்தார்.

9-ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலெனா ரைபகினா 6-3, 6-0 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜூலியட்டா பரேஜாவையும், 11-ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் கரோலினா முச்சோவா 6-3, 2-6, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸையும், 15-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் தரியா கஸட்கினா 7-5, 6-1 என்ற செட் கணக்கில் ருமேனியாவின் கேப்ரியலா ரூஸையும், வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top