ஐசிசி ஆடவர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘சி’ பிரிவில் இரு முறை சாம்பியன்களான மேற்கு இந்தியத் தீவுகள், இங்கிலாந்துடன் இத்தாலி, நேபாளம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் நேபாளம் அணி குறித்த ஒரு பார்வை…
முன்னாள் ஆஸ்திரேலிய சர்வதேச வீரரான ஸ்டூவர்ட் லா, நேபாள அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ளார். டி 20 உலகக் கோப்பையில் விளையாட கிடைத்துள்ள வாய்ப்பை நேபாள அணி சிறந்த முறையில் பன்படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டக்கூடும்.
அந்த அணியின் பேட்ஸ்மேன்களான குஷால் புர்டெல், ஆசிஃப் ஷேக் ஆகியோர் 2025-ம் ஆண்டில் முறையே 509 மற்றும் 394 ரன்கள் விளாசி அசத்தி உள்ளனர். இதில் குஷால் புர்டெல் டி 20 சர்வதேசப் போட்டியில் சதம் அடித்த ஐந்து நேபாள வீரர்களில் ஒருவர் ஆவார், மேலும் 2024-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 92 ரன்கள் விளாசி மிரட்டியிரநதார்.
துணை கேப்டன் தீபேந்திர சிங் ஐரியும் சர்வதேச டி 20 போட்டியில் சதம் அடித்த வீரராக உள்ளார். சந்தீப் லாமிச்சான் கடந்த ஆண்டு 21 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
அணி விவரம்:
ரோஹித் பவுடல் (கேப்டன்), திபேந்திர சிங் ஐரி, சந்தீப் லமிச்சேன், குஷால் புர்டெல், ஆசிப் ஷேக், சுந்தீப் ஜோரா, ஆரிப் ஷேக், பசீர் அகமது, சோம்பால் கமி, கரண் கே.சி, நந்தன் யாதவ், குல்ஷன் ஜா, லலித் ராஜ்பன்ஷி, ஷேர் மல்லா, லோகேஷ் பாம்.
மோதல் விவரம்:


