Jasmine Paolini

இத்தாலி டென்னிஸ் பைனலில் ஜாஸ்மின் பவுலினி

ரோம்

இத்தாலியின் ரோம் நகரில் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் 6-ம் நிலை வீராங்கனையான இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, அமெரிக்காவின் பெய்டன் ஸ்டெர்ன்ஸுடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஜாஸ்மின் பவுலினி 7-5, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் பவுலினி, அமெரிக்காவின் கோ கோ காஃபுடன் மோதுகிறார். 4-ம் நிலை வீராங்கனையான கோ கோ காஃப் அரை இறுதி சுற்றில் 8-ம் நிலை வீராங்கனையான சீனாவின் சென் குயின்வென்னை 7-6 (7-3), 4-6, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் 6-0, 6-1 என்ற நேர் செட் கணக்கில் 6-ம் நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூடையும், 11-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டாமி பால் 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் 30-ம் நிலை வீரரான போலந்தின் ஹூபர்ட் ஹர்காக்ஸையும் வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top