Mirra Andreeva

பிரெஞ்சு ஓபன் 3-வது சுற்றில் ஜன்னிக் சின்னர், மிர்ரா ஆண்ட்ரீவா

பாரிஸ்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஜன்னிக் சின்னர், மிர்ரா ஆண்ட்ரீவா உள்ளிட்டோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 166-ம் நிலை வீரரான பிரான்ஸின் ரிச்சர்ட் காஸ்கெட்டுன் மோதினார். இதில் ஜன்னிக் சின்னர் 6-3, 6-0, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

3-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஜிவேரேவ் 3-6, 6-1, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் 88-ம் நிலை வீரரான நெதர்லாந்தின் ஜெஸ்பர் டி ஜாங்கை வீழ்த்தி 3-வது சுற்றில் நுழைந்தார்.

Jannik Sinner 1

மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 6-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் 35-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஆஷ்லின் க்ரூகரையும் 3-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த 55-ம் நிலை வீராங்கனையான அன் அலியையும் வீழ்த்தி 3-வது சுற்றில் நுழைந்தனர்.

ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, செக்குடியரசின் ஆடம் பாவ்லாசெக் ஜோடி 7-6(8), 5-7, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ராபர்ட் கேஷ், டிரேசி ஜோடியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது. மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, மெக்சிகோவின் மிகுவல் ரெய்ஸ் வரேலா ஜோடி 6-2, 6-1 என்ற செட் கணக்கில் அர்ஜெண்டினாவின் கமிலோ யூகோ காரபெல்லி, சீனாவின் யுன்சாவோகேடே பூ ஜோடியை தோற்கடித்தது.

இந்தியாவின் யுகி பாம்ப்ரி, அமெரிக்காவின் ராபர்ட் காலோவே ஜோடி தங்களது முதல் சுற்றில் 6-3, 6-7(8), 6-3 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் ராபின் ஹாஸ், ஜெர்மனியின் ஹென்ட்ரிக் ஜெபன்ஸ் ஜோடியை வீழ்த்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top