cricket art

இந்தியா – இங்கிலாந்து 5 டி 20-ல் மோதல்

மான்செஸ்டர்

இந்திய கிரிக்கெட் அணி 2026-ல் இங்கிலாந்துடன் 5 டி 20 ஆட்டங்களில் விளையாடுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி வரும் 2026-ம் ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி 20 ஆட்டங்கள், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்கான போட்டி அட்டவணையை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதன்படி இந்தியாவின் சுற்றுப்பயணம் 2026-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி துர்ஹாமில் முதல் டி 20 போட்டியுடன் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து மான்செஸ்டர் (ஜூலை 4), நாட்டிங்ஹாம் (ஜூலை 7), பிரிஸ்டல் (ஜூலை 9) மற்றும் சவுத்தாம்ப்டன் (ஜூலை 11) ஆகிய இடங்களில் மற்ற 4 போட்டிகள் நடைபெறும்.

டி 20 தொடரை அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதன் முதல் ஆட்டம் பர்மிங்காமில் ஜூலை 14-ம் தேதி நடைபெறுகிறது. 2-வது ஒருநாள் போட்டி ஜூலை 16-ம் தேதி கார்டிஃபிலும், 3-வது மற்றும் கடைசி போட்டி 19-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்திலும் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top