புதுடெல்லி
ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய ஆடவர் ஹாக்கி அணி வரும் ஆகஸ்ட் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் 4 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் வரும் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 7 வரை பிஹாரில் உள்ள ராஜ்கிர் பகுதியில் நடைபெறுகிறது. இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெறும். இதனால் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் முக்கியத்தும் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய ஆடவர் ஹாக்கி அணி வரும் ஆகஸ்ட் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் 4 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. நட்புரீதியிலான இந்த 4 ஆட்டங்களும் பெர்த் நகரில் ஆகஸ்ட் 15, 16, 19 மற்றும் 21-ம் தேதிகளில் நடைபெறுகிறது.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் முதல் 2 ஆட்டங்களில் இருந்து ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.