ரொசாரியோ
இந்தியா, உருகுவே, அர்ஜெண்டினா, சிலி ஆகிய 4 நாடுகள் கலந்து கொண்டுள்ள மகளிர் ஜூனியர் ஹாக்கி தொடர் அர்ஜெண்டினாவில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா, உருகுவே அணி எதிர்த்து விளையாடியது. இதில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் கனிகா இரு கோல்களையும் (46 மற்றும் 50 நிமிடங்கள்), சோனம் ஒரு கோலையும் (21-வது நிமிடம்) அடித்தனர். உருகுவே அணி சார்பில் மிலாக்ரோஸ் சீகல் (3-வது நிமிடம்), அகஸ்டினா (24-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை (27-ம் தேதி) அர்ஜெண்டினாவை எதிர்கொள்கிறது.