பதும் தானி
இந்தியா – தாய்லாந்து அணிகள் இடையிலான சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி தாய்லாந்தில் உள்ள பதும் தானி நகரில் உள்ள தம்மாசாட் ஸ்டேடியத்தில் இன்று (ஜூன் 4) நடக்கிறது. மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஃபேன்கோடு செயலியில் பார்க்கலாம்.
உலக தரவரிசையில் 127-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, ஆசிய கோப்பை தகுதி சுற்றில் தனது அடுத்த ஆட்டத்தில் வருகிற 10-ம் தேதி ஹாங்காங்கை எதிர்கொள்கிறது.
இதேபோல் தரவரிசையில் 99-வது இடத்தில் இருக்கும் தாய்லாந்து அணி, துர்க்மெனிஸ்தானை சந்திக்கிறது. ஆசிய கோப்பை போட்டிக்கு சிறப்பாக தயாராவதற்கு இந்த நட்புறவு ஆட்டம் உதவிகரமாக இருக்கும். இவ்விரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன.
இதில் இந்தியா 7 ஆட்டத்திலும், தாய்லாந்து 12 ஆட்டத்திலும் வெற்றி பெற்று உள்ளன. 7 ஆட்டங்கள் டிராவில் முடிந்தது.