karun nair

கருண் நாயர் இரட்டை சதம் விளாசல்

கன்டர்பரி

இந்தியா ஏ – இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இடையிலான அதிகாரப்பூர்வமற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கன்டர்பரியில் நடைபெற்று வருகிறது.

இதன் முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா ஏ அணி 90 ஓவர்களில் 90 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 409 ரன்கள் குவித்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24, கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

சர்பராஸ் கான் 119 பந்துகளில், 13 பவுண்டரிகளுடன் 92 ரன்கள் விளாசிய நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். கருண் நாயர் 246 பந்துகளில், ஒரு சிக்ஸர், 24 பவுண்டரிகளுடன் 186 ரன்களும், துருவ் ஜூரெல் 104 பந்துகளில், ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 82 ரன்களும் விளாசி களத்தில் இருந்தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இந்தியா ஏ அணி 125.1 ஓவர்களில் 557 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

கருண் நாயர் 281 பந்துகளில், 26 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 204 ரன்கள் விளாசிய நிலையில் ஸமான் அக்தர் பந்தில் அவுட் ஆனார். துருவ் ஜூரெல் 120 பந்துகளில், ஒரு சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 94 ரன்கள் எடுத்த நிலையில் அஜீத் சிங் பந்தில் ஆட்டமிழந்தார்.

நித்திஷ் குமார் ரெட்டி 7, ஷர்துல் தாக்குர் 27, ஹர்ஷ் துபே 32, அன்ஷுல் கம்போஜ் 23, ஹர்ஷித் ராணா 16 ரன்களில் வெளியேறினர். இங்கிலாந்து லயன்ஸ் அணி தரப்பில் ஜோஷ் ஹல், ஸமான் அக்தர் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், எடி ஜேக் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இதையடுத்து பேட் செய்த இங்கிலாந்து லயன்ஸ் 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 52 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரரான டாம் ஹைனஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 147 பந்துகளை சந்தித்த அவர், 11 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அவருக்கு உறுதுணையாக விளையாடிய மேக்ஸ் ஹோல்டன் 61 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தார். முன்னதாக பென் மெக்கின்னி 16 ரன்கள் எடுத்த நிலையில் அன்ஷுல் கம்போஜ் பந்திலும் எமிலியோ கே 46 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்ஷ் துபே பந்திலும் ஆட்டமிழந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top