india A

இந்தியா ஏ அணி 348 ரன்னுக்கு ஆட்டமிழப்பு

நார்த்தம்டன்

இந்தியா ஏ – இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நார்த்தம்டனில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்தியா ஏ அணி 83 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 391 ரன்கள் எடுத்தது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் 17, கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன் 11, கருண் நாயர் 40, கே.எல்.ராகுல் 116, துருவ் ஜூரெல் 52, நித்திஷ் குமார் ரெட்டி 34, ஷர்துல் தாக்குர் 19 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

தனுஷ் கோட்டியன் 5, அன்ஷுல் கம்போஜ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2–வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இந்தியா ஏ அணி 89.3 ஓவர்களில் 348 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தனுஷ் கோட்டியன் 15, அன்ஷுல் கம்போஜ் 2, துஷார் தேஷ்பாண்டே 11 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து லயன்ஸ் அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்களையும் ஜார்ஜ் கில், ஜோஷ் டங் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து லயன்ஸ் 2–வது நாள் ஆட்டத்தின் முடிவில் 46 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது.

டாம் ஹைன்ஸ் 54, பென் மெக்கின்னி 12, எமிலோ கே 71 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜோர்டான் காக்ஸ் 31, ஜேம்ஸ் ரீவ் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். இன்று 3–வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top