Ticket

சிஎஸ்கே – ஆர்சிபி போட்டிக்கு ரசிகர்கள் ‘திண்டாட்டம்’

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையிலான ஆட்டம் வரும் 28-ம் தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று (மார்ச் 25) காலையில் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது.

மைதானத்தில் 38 ஆயிரம் இருக்கைகளே இருந்த நிலையில் டிக்கெட் வாங்குவதற்காக ஆன்லைனில் 3.7 லட்சம் பேர் காத்திருந்தனர். இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் போட்டிக்கும் டிக்கெட் கிடைக்காமல் லட்சக்கணக்கானோர் காத்திருந்து ஏமாற்றம் அடைந்திருந்தனர். இப்போதும் இது தொடர் கதையாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top