stokes

இங்கிலாந்து அணியின் வேட்டையில் 669 ரன்கள் எத்தனையாவது இடம்?

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 358 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் 157.1 ஓவர்களில் 669 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் 5-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இந்த வகையில் 1938-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 903 ரன்களையும், 1930-ல் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக 849 ரன்களையும், 2024-ல் பாகிஸ்தானுக்கு எதிராக 823 ரன்களையும், 2011-ல் இந்திய அணிக்கு எதிராக 710 ரன்களையும் இங்கிலாந்து அணி குவித்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top