Zak Crawley

3 வீரர்கள் சதம்.. இங்கிலாந்து 498 ரன் குவித்து மிரட்டல்

நாட்டிங்காம்

இங்கிலாந்து – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தது. தனது 6-வது சதத்தை விளாசிய தொடக்க வீரரான பென் டக்கெட் 134 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 20 பவுண்டரிகளுடன் 140 ரன்கள் விளாசிய நிலையில் மாதவரே பந்தில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான ஸாக் கிராவ்லி 145 பந்துகளில், 12 பவுண்டரிகளுடன் தனது 5-வது சதத்தை விளாசினார். அவரைத் தொடர்ந்து மட்டையை சுழற்றிய ஆலி போப் 109 பந்துகளில், ஒரு சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். இது அவருக்கு 8-வது சதமாக அமைந்தது.

அபாரமாக விளையாடி வந்த ஸாக் கிராவ்லி 171 பந்துகளில், 14 பவுண்டரிகளுடன் 124 ரன்கள் எடுத்த நிலையில் சிகந்தர் ராஸா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இதன் பின்னர் களமிறங்கிய ஜோ ரூட் 44 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்த நிலையில் முசாராபானி பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

Ben dukket

முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி 88 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 498 ரன்கள் குவித்தது. ஆலி போப் 163 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 24 பவுண்டரிகளுடன் 169 ரன்களும், ஹாரி புரூக் 9 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top