Eng win_2

சூப்பர் 8 சுற்றில் நுழைந்தது இங்கிலாந்து

 ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நேற்று ‘சி’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் முன்​னாள் சாம்​பிய​னான இங்கிலாந்து, அறி​முக அணி​யான இத்தாலியுடன் மோதி​யது.

முதலில் பேட் செய்த இங்​கிலாந்து அணி 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 202 ரன்​கள் குவித்​தது. ஆல்​ர​வுண்​ட​ரான வில் ஜேக்ஸ் 22 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 53 ரன்​கள் விளாசி​னார். பில் சால்ட் 28, ஜாஸ் பட்​லர் 3, ஜேக்​கப் பெத்​தேல் 23, டாம் பேன்​டன் 30, கேப்​டன் ஹாரி புரூக் 14, சேம் கரண் 25, ஜேமி ஓவர்​டன் 15 ரன்​கள் சேர்த்​தனர். இத்தாலி அணி சார்​பில் கிராண்ட் ஸ்டூவர்ட், கிரிஷான் கலுகமகே ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர்.

203 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இத்​தாலி அணி ஜோப்ரா ஆர்ச்​சர் வீசிய முதல் ஓவரிலேயே 2 விக்கெட்களை பறி​கொடுத்​தது. அந்​தோணி மோஸ்​கா, ஜேஜே ஸ்மட்ஸ் ரன் ஏதும் எடுக்​காமல் நடையை கட்​டினர். இதையடுத்து களமிறங்​கிய கேப்​டன் ஹாரி மானெண்டி 12 ரன்​களில் ஜேமி ஓவர்​டன் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.

4-வது விக்​கெட்​டுக்கு ஜஸ்​டின் மோஸ்கா​வுடன் இணைந்த பென் மானெண்டி இங்​கிலாந்து பந்​து​வீச்சை பதம் பார்த்தார். அவரது அதிரடி​யால் இத்​தாலி அணி 11.3 ஓவர்களில் 100 ரன்​களை குவித்​தது. மட்​டையை சுழற்​றிய பென் மானெண்டி 25 பந்​துகளில், 6 சிக்​ஸர்​கள், 4 பவுண்டரிகளு​டன் 60 ரன்​கள் விளாசிய நிலை​யில் வில் ஜேக்ஸ் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.

4-வது விக்​கெட்​டுக்கு பென் மானெண்​டி, ஜஸ்​டின் மோஸ்கா ஜோடி 8 ஓவர்​களில் 92 ரன்​கள் குவித்​தது. இதைத் தொடர்ந்து களமிறங்​கிய கிராண்ட் ஸ்டூவர்ட்​டும் மட்​டையை சுழற்​றி​னார். மறு​புறம் சீராக ரன்​கள் சேர்த்த ஜஸ்டின் மோஸ்கா 34 பந்​துகளில், 7 பவுண்​டரி​களு​டன் 43 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஆதில் ரஷித் பந்​தில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து களமிறங்​கிய மார்​கஸ் காம்​போபி​யானோ 2, கியான்​-பியரோ மீட் ரன் ஏதும் எடுக்​காத நிலை​யில் சேம் கரண் பந்​தில் நடையை கட்​டினர். கடைசி 3 ஓவர்​களில் இத்தாலி அணி​யின் வெற்​றிக்கு 51 ரன்​கள் தேவை​யாக இருந்​தது. ஆதில் ரஷித் வீசிய 18-வது ஓவரில் கிராண்ட் ஸ்டூவர்ட் 3 சிக்​ஸர்​களை பறக்​க​விட்டு மிரட்​டி​னார். இந்த ஓவரில் 21 ரன்​கள் விளாசப்​பட்​டது. இதையடுத்து 12 பந்துகளில் 30 ரன்​கள் தேவை என்ற நிலை உரு​வானது.

சேம் கரண் வீசிய அடுத்த ஓவரில் கிராண்ட் ஸ்டூவர்ட் ஆட்ட​மிழந்​தார். அவர், 23 பந்​துகளில், 5 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 45 ரன்​கள் விளாசி​னார். இந்த ஓவரில் சேம் கரண் 5 ரன்​களை மட்​டுமே விட்​டுக்​கொடுக்க இங்கிலாந்து அணி பெரு​மூச்சு விட்​டது. கடைசி ஓவரில் 25 ரன்​கள் தேவை​யாக இருந்த நிலை​யில் ஜேமி ஓவர்​டன் இந்த ஓவரை மெய்​ட​னாக வீசி​யதுடன் ஜஸ்​பிரீத் சிங் (12), அலி ஹசன் (0) ஆகியோரை ஆட்​ட​மிழக்​கச் செய்​தார்.

முடி​வில் 20 ஓவர்​களில் இத்​தாலி அணி 178 ரன்​களுக்கு ஆட்ட​மிழந்​தது. இங்​கிலாந்து அணி தரப்​பில் சேம் கரண், ஜேமி ஓவர்​டன் ஆகியோர் தலா 3 விக்​கெட்​களை வீழ்த்தினர். ஜோப்ரா ஆர்ச்​சர் 2 விக்​கெட்​களை கைப்பற்றினார்.

24 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற இங்​கிலாந்து அணிக்கு இது 3-வது வெற்​றி​யாக அமைந்​தது. அந்த அணி லீக் சுற்றை 3 வெற்​றி, ஒரு தோல்​வி​யுடன் 6 புள்​ளி​கள் பெற்று 2-வது இடத்​துடன் நிறைவு செய்து சூப்​பர் 8 சுற்றுக்கு முன்​னேறியது. இதே பிரி​வில் ஏற்​கெனவே மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​யும் சூப்​பர் 8 சுற்​றுக்கு முன்​னேறி​யிருந்​தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top