இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 358 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் 157.1 ஓவர்களில் 669 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 141 ரன்கள் விளாசினார்.
ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தின் அதிகபட்ச ஸ்கோராக இது அமைந்தது. இதற்கு முன்னர் 1964-ல் ஆஸ்திரேலிய அணி 656 ரன்கள் குவித்திருந்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.