Novak Djokovic

400-வது வெற்றியை நோக்கி ஜோகோவிச்

மெல்பர்ன்: ஆஸ்​திரேலிய ஓபன் டென்​னிஸ் தொடரில் செர்​பி​யா​வின் நோவக் ஜோகோ​விச் 400-வது வெற்றியை நெருங்குகிறார்.

ஆஸ்​திரேலி​யா​வின் மெல்​பர்ன் நகரில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரின் 5-ம் நாளான நேற்று ஆடவர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் நடப்பு சாம்​பிய​னான இத்​தாலி​யின் ஜன்​னிக் சின்​னர் 6-1, 6-4, 6-2 என்ற செட் கணக்​கில் தகுதி நிலை வீர​ரான ஆஸ்​திரேலி​யா​வின் ஜேம்​ஸ் டக்வொர்த்தை​யும், 4-ம் நிலை வீரரும், 10 முறை சாம்பியனான செர்​பி​யா​வின் நோவக் ஜோகோ​விச் 6-3, 6-2, 6-2 என்ற செட் கணக்​கில் 141-ம் நிலை வீர​ரான இத்​தாலி​யின் பிரான்​செஸ்கோ மேஸ்ட்​ரெல்​லியை​யும் வீழ்த்தி 3-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

கிராண்ட் ஸ்லாம் போட்​டிகளில் ஜோகோ​விச்​சின் 399-வது வெற்​றி​யாக இது அமைந்​தது. 400 வெற்​றிகள் என்ற மைல்கல் சாதனையை படைக்க அவருக்கு மேற்​கொண்டு ஒரு வெற்றி மட்​டுமே தேவை​யாக உள்​ளது. நாளை (24ம் தேதி) நடைபெறும் 4-வது சுற்றில் இந்த வெற்றியை ஜோகோவிச் வசப்படுத்தி வரலாற்று சாதனை படைக்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top