ஜகார்த்தா
இந்தோனேஷியா ஓபன் பாட்மிண்டன் தொடர் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடியானது மலேசியாவின் மான் வெய் சோங், டீ கை வுன் ஜோடியை எதிர்த்து விளையாடியது.
43 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாட்விக் – ஷிராக் ஜோடி 19-21, 16-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.