Chirag Shetty

பாட்மிண்டன் 2-வது சுற்றில் சாட்விக்-ஷிராக் ஜோடி

சிங்கப்பூர்

சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாட்விக்-ஷிராக் ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் தரவரிசையில் 27-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட் ஜோடி, 41-வது இடத்தில் உள்ள மலேசியாவின் சூங் ஹான் ஜியான், முஹம்மது ஹைகல் ஜோடியை எதிர்த்து விளையாடியது.

இதில் ஷாட்விக்-ஷிராக் ஜோடி 21-16, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 17-ம் நிலை வீரரான இந்தியாவின் லக்சயா சென், 19-ம் நிலை வீரரான சீன தைபேவின் லின் ஹன் யியுடன் மோதினார். இதில் முதல் செட்டை லக்சாய சென் 21-15 என கைப்பற்றினார். 2-வது செட்டில் பதிலடி கொடுதத லின் ஹன் அந்த செட்டை 21-17 என தன்வசப்படுத்தினார்.

இதனால் வெற்றியை தீர்மானித்த கடைசி செட் ஆட்டம் பரபரப்பானது. இதில் லக்சயா சென் 5-13 என்ற கணக்கில் பின்தங்கிய நிலையில் இருந்த நிலையில் முதுகு வலி காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார். இதனால் லின் ஹன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் கபூர், ருத்விகா ஷிவானி காடே ஜோடி 21-16, 21-19 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் சென் ஹி யி, பிரான்செஸ்கா கோர்பெட் ஜோடியை வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top