2026-ம் ஆண்டு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்றில் தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான போட்டியில் நேற்று முன்தினம் இரவு பிரேசிலின் சாவோ பாவ்லோ நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில் – பராகுவே அணிகள் மோதின. இதில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
44-வது நிமிடத்தில் வினீசியஸ் ஜூனியர் கோல் அடித்து அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் பிரேசில் அணி 10 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. பிரேசில் அணிக்கு இன்னும் 2 ஆட்டங்கள் மீதம் உள்ளன.