Bhavina_2

பாரா டேபிள் டென்னிஸில் பவீனாபென் சாம்பியன்

3-வது தேசிய பாரா ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் பிரிவில் பவீனாபென் ஹஸ்முக்பாய் படேல் சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்தப் போட்டி சென்னை ஐஐடி-யில் நடைபெற்றது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் 220 பேர் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தில் இருந்து 62 பேர் பங்கேற்றனர். மெட்ராஸ் பட்டணம் ரோட்டரி கிளப், சென்னை ஐஐடி, தமிழக டேபிள் டென்னிஸ் சங்கத்தின் பாரா டேபிள் டென்னிஸ் கமிட்டி ஆகியவை இணைந்து இந்த போட்டியை நடத்தின.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற டபிள்யூஎஸ்04-05 பிரிவு இறுதி ஆட்டத்தில் பவீனாபென் ஹஸ்முக்பாய் படேல் 3-0 (11-2, 11-4, 11-4) என்ற செட் கணக்கில் காஜல் மக்வானாவை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top