இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 358 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் 157.1 ஓவர்களில் 669 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 141 ரன்கள் விளாசினார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 ஆயிரம் ரன்கள் மற்றும் 200 விக்கெட்களை வீழ்த்திய ஆல்ரவுண்டர்களின் பட்டியலில் தென் ஆப்பிக்காவின் ஜேக் காலிஸ் (13,289 ரன்கள், 292 விக்கெட்கள்) மேற்கு இந்தியத் தீவுகளின் கேரி சோபர்ஸ் (8,032 ரன்கள், 235 விக்கெட்கள்) ஆகியோருடன் இணைந்துள்ளார் பென் ஸ்டோக்ஸ் (7,032 ரன்கள், 229 விக்கெட்கள்). மேலும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஒன்றில் சதமும், 5 விக்கெட்களையும் வீழ்த்திய 5-வது கேப்டன் என்ற பெருமையையும் பென் ஸ்டோக்ஸ் பெற்றுள்ளார்.