மான்செஸ்டர்
இங்கிலாந்து அணிக்கு எதிராக மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் போது கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தை ரீவர்ஸ் ஸ்வீப் ஷாட் விளையாட முயன்ற போது காயம் அடைந்தார். கால் வீங்கிய ரத்த காயத்துடன் ரிஷப் பந்த் களத்தில் இருந்து வெளியேறி இருந்தார்.
ஸ்கேன் பரிசோதனையில் பந்து, அவரது வலது குதிகாலை பலமாக தாக்கியதில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து 2-வது நாளான நேற்று அவர், நொண்டியபடி களத்துக்கு வந்து பேட்டிங் செய்தார். அவர் களத்துக்குள் நுழைந்த போது ரசிகர்கள் கைதட்டி உற்சாகமூட்டினர். களத்தில் ரிஷப் பந்த் காட்டிய போராட்ட குணம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதற்கிடைய பிசிசிஐ வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “மான்செஸ்டர் டெஸ்டின் முதல் நாளில் வலது காலில் காயம் ஏற்பட்ட ரிஷப் பந்த், போட்டியின் மீதமுள்ள நாட்களில் விக்கெட் கீப்பிங் பணிகளைச் செய்ய மாட்டார். அவருக்கு பதிலாக துருவ் ஜூரெல் விக்கெட் கீப்பராகப் பொறுப்பேற்பார். காயம் இருந்தபோதிலும், ரிஷப் பந்த் அணியின் தேவைகளுக்கு ஏற்ப பேட்டிங் செய்வார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spinning those virtual reels at pinas77slot! Wish me luck! They have a great selection of slots. You might find it intersting: pinas77slot
Fairplaypro… the name sounds promising, right? Honestly, it’s okay. Nothing particularly stands out, but it’s not terrible either. Odds are average, and the interface is clean enough. Might be worth a look if you’re comparing options: fairplaypro.
MQMBet? Never heard of it before, to be honest. Might be a newer platform. Always be careful with new sites, and make sure they’re properly licensed before you start betting. You can find their site at mqmbet. Proceed with caution!