zampa

4-வது டி 20 போட்டியிலும் ஆஸி. வெற்றி

செயின்ட் கீட்ஸ்

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 4-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி.

செயின்ட் கீட்ஸில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. ரோவ்மன் பவல் 28, ரோமாரியோ ஷெப்பர்டு 28, ஜேசன் ஹோல்டர் 26, பிரண்டன் கிங் 18, ஷிம்ரன் ஹெட்மயர் 16, அகீல் ஹோசைன் 16 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஸாம்பா 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஆரோன் ஹார்டி, சேவியர் பார்ட்லெட், சீன் அபோட் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

206 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜோஷ் இங்லிஷ் 30 பந்துகளில், ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 51 ரன்களும், கேமரூன் கிரீன் 35 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 55 ரன்களும் விளாசினர். 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் 4-0 என முன்னிலை வகிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top