Ayush Shetty 2 e1746935410983

பாட்மிண்டனில் ஆயுஷ், உனதி ஏமாற்றம் !

தைபே

தைபே ஓபன் பாட்மிண்டன் தொடரில் அரை சுற்றில் இந்தியாவின் இளம் நட்சத்திரங்களான ஆயுஷ் ஷெட்டி, உனதி ஹூடோ தோல்வி அடைந்தனர்.

தைபேவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி சுற்றில் உலகத் தரவரிசையில் 44-வது இடத்தில் உள்ள இந்தியாவின் இளம் வீரரான ஆயுஷ் ஷெட்டி, 7-வது இடத்தில் உள்ள தைவானின் சோ டியேன் சென்னுடன் மோதினார். இதில் ஆயுஷ் ஷெட்டி 18-21, 17-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி சுற்றில் இந்தியாவின் உனதி ஹூடா, உலகத் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள டொமோக்கா மியசாகியை எதிர்கொண்டார். இதில் உனதி ஹூடா 19-21, 11-21 என்ற நேர் செட் கணக்கில் வீழ்ந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top