தேசிய கபடியில் இந்தியன் ரயில்வே சாம்பியன்

72-வது சீனியர் ஆண்கள் தேசிய கபடி சாம்பியன் பட்டத்தை இந்தின்ய ரயில்வே அணி வென்றது.

72-வது சீனியர் ஆண்கள் தேசிய கபடி போட்டி வதோதராவில் உள்ள சாமா உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் மகாராஷ்டிரா இந்தியன் ரயில்வே அணிகள் மோதின. இதில் இந்தியன் ரயில்வே அணி 49-31 என்ற புள்களி கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

பங்கஜ் மோகிதே 12 ரெய்டு புள்ளிகளுடன் ரெய்டு பிரிவை வழிநடத்தினார், அதே சமயம் பிகேஎல் 12-இல் தபாங் டெல்லி கே.சி. அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற அஷு மாலிக் எட்டு புள்ளிகளைப் பங்களித்தார். யில்வே அணியின் தடுப்பாட்டம், ரெய்டு வீரர்களுக்குச் சிறந்த ஒத்துழைப்பை வழங்கியது.

14 டேக்கிள் புள்ளிகளைப் பெற்று ஆட்டம் முழுவதும் மகாராஷ்டிரா அணிக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது. சிவம் படாரே, அஸ்லம் இனாம்தார் ஆகியோரின் முயற்சிகள் இருந்தபோதிலும், இரயில்வே அணியின் தாக்குதல் ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க மகாராஷ்டிரா தடுமாறியது. இறுதியில் இரயில்வே அணி 18 புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top