Mohsin Naqvi

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல்

டி 20 உலகக் கோப்பையில் இருந்து வங்கதேச அணி நீக்கப்பட்டுள்ளதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் எங்கள் நாட்டு அரசு அனுமதி வழங்கினால் மட்டுமே டி 20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்போம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரான மோஷின் நக்வி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரான மோஷின் நக்வி கூறும்போது, “நாங்கள் டி20 உலகக் கோப்பையில் விளையாடுகிறோமா இல்லையா என்பது குறித்து அரசாங்கமே முடிவு எடுக்கும்.

எங்களது பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் வெளிநாட்டில் இருக்கிறார். அவர், நாடு திரும்பியதும் அவரிடம் ஆலோசனை கேட்போம். அரசாங்கத்தின் முடிவே இறுதியானது. அவர்கள், உலகக் கோப்பை தொடரில் நாங்கள் பங்கேற்க வேண்டாம் என்று சொன்னால், ஐசிசி வேறு அணியை அழைக்கலாம்.

வங்கதேசம் கிரிக்கெட்டில் பெரிய பங்குதாரராக உள்ளது. இந்த பிரச்சினையில் வழக்கில் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டுள்ளனர். புதன்கிழமை நடைபெற்ற ஐசிசி கூட்டத்திலும் இதை நான் சுட்டிக்காட்டினேன். வங்கதேசத்தின் நிலைப்பாட்டில் பல காரணிகள் உள்ளன. அவற்றை சூழ்நிலை வரும்போது கூறுவேன்.

ஒரு நாடுதான் ஆணையிடுகிறது. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் சாதகமான இடங்களை ஐசிசி மாற்றியது. ஆனால் அது வங்கதேசத்துக்கு ஏன் செய்யப்படவில்லை?” நேரம் வரும்போது எங்கள் கொள்கையும் நிலைப்பாடும் தெளிவாக இருக்கும்.

அரசாங்கம் ஒரு முடிவை எடுக்கும் போது அது அனைவருக்கும் தெரியும். நாங்கள் ஐசிசி-யின் கீழ் இல்லை, எங்கள் அரசாங்கத்துக்கு அடிபணிந்தவர்கள். பிரதமர் நாடு திரும்பியதும் அவர் முடிவு செய்வார். நாங்கள் அரசாங்க உத்தரவுகளைப் பின்பற்றுவோம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top