உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, 69-ம் நிலை வீராங்கனையான பல்கேரியாவின் கலோயானா நல்பன்டோவாவை எதிர்த்து விளையாடினார். இதில் உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள பி.வி.சிந்து 23-21, 21-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆடவா் ஒற்றையரில், 2023-ஆம் ஆண்டு வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய் 21-18, 21-15 என்ற செட் கணக்கில் ஃபின்லாந்தின் ஜாகிம் ஓல்டாா்ஃபை தோற்கடித்தார். இந்த ஆட்டம் 47 நிமிடங்களில் நிறைவைடந்தது.

