அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் முபதாலா சிட்டி டிசி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் கிரீஸ் நாட்டின் மரியா சக்கா, அமெரிக்காவின் எம்மா நவரோவை எதிர்த்து விளையாடினார். இதில் மரியா சக்காரி 7-5, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, கனடாவின் லெய்லா பெர்னாண்டஸுடன் மோதினார். இதில் லெய்லா பெர்னாண்டஸ் 6-3, 1-6, 7-5 என்ற செட் கணக்கில் ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி கால் இறுதி சுற்றில் கால்பதித்தார். இங்கிலாந்தின் எம்மா ரடுகானு 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நவோமி ஒசாகாவையும், போலந்தின் மாக்டலீனா ஃப்ரெச் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸை தோற்கடித்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

