புதுடெல்லி
டாம்பியர் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல் அரை இறுதிக்கு முன்னேறினார்.
பின்லாந்தின் டாம்பியர் நகரில் டாம்பியர் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் தரவரிசையில் 306-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சுமித் நாகல், 361-வது இடத்தில் உள்ள அர்ஜெண்டினாவின் நிகோலஸ் கிக்கருடன் மோதினார். இதில் சுமித் நாகல் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

