Tamanna

குத்துச்சண்டை அரை இறுதியில் தமன்னா, பிரியா

பாங்காக்

தாய்லாந்தின் பாங்காக் நகரில் தாய்லாந்து ஓபன் சர்வதேச குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 51 கிலோ எடைப் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் தம்மன்னா, சீன தைபேவின் லியு யு ஷானை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.

57 கிலோ எடைப் பிரிவில் பிரியா 5-0 என்ற கணக்கில் தென் கொரியாவின் பார்க் ஹயூனை வீழ்த்தி அரை இறுதியில் நுழைந்தார்.

ஆடவருக்கான 75 கிலோ எடைப் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் தீபக், தென் கொரியாவின் கிம் ஹயோனை தோற்கடித்து அரை இறுதியில் கால்பதித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top