பாரா ஈட்டி எறிதலில் மகேந்திரா குஜ்ரார் உலக சாதனை

புதுடெல்லி

பாரா ஈட்டி எறிதலில் இந்தியாவின் மகேந்திரா குஜ்ரார் உலக சாதனை படைத்தார்.

உலக பாரா தடகள போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான F42 பிரிவில் இந்தியாவின் மகேந்திரா குஜ்ரார் 61.17 தூரம் ஈட்டியை எறிந்து உலக சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றார்.

இதற்கு முன்னர் 2022-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் பிரேசிலின் ராபர்டோ ஃப்ளோரியானி எடெனில்சன் 59.19 மீட்டர் தூரம் எறிந்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார் 27 வயதான மகேந்திரா குஜ்ரார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top