குத்துச்சண்டை அரை இறுதியில் சஞ்சு, அன்ஷுல் கில்

பாங்காக்

தாய்லாந்து ஓபன் சர்வதேச குத்துச்சண்டை தொடரில் இந்தியாவின் சஞ்சு, அன்ஷுல் கில் ஆகியோர் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிருக்கான 60 கிலோ எடைப் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் சஞ்சு 5-0 என்ற கணக்கில் இந்தோனேஷியாவின் ரேகா மரியானா காசிபுலனை தோற்கடித்து அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

ஆடவருக்கான 90+ கிலோ எடைப் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் அன்ஷுல் கில், கஜகஸ்தானின் டேனியல் சபர்பேவை தோற்கடித்து அரை இறுதி சுற்றில் கால்பதித்தார். அரை இறுதி சுற்றில் அன்ஷுல் கில், உஸ்பெகிஸ்தானின் ருஸ்டமோவ் அப்துராக்மோனுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top