கிடாம்பி ஸ்ரீகாந்த்

கால் இறுதி சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த்

 கோலாலம்பூர்

மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 65-ம் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், 33-ம் நிலை வீரரான அயர்லாந்தின் நகட் நுயென்னுடன் மோதினார்.

59 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 23-21, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். கால் இறுதி சுற்றில் ஸ்ரீகாந்த், பிரான்ஸின் டோமா ஜூனியர் போபோவுடன் மோதுகிறார். 

 கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ, துருவ் கபிலா ஜோடி 21-17, 18-21, 21-15 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் லியா பலெர்மோ, ஜூலியன் மாயோ ஜோடியை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top