2026-ம் ஆண்டு ஜனவரி 5-ல் ஹாக்கி இந்தியா லீக்

ஹாக்கி இந்தியா லீக் தொடர் 7 வருட இடைவேளைக்கு பிறகு கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. இதில் ஆடவர் பிரிவில் பெங்கால் டைகர்ஸ் அணியும், மகளிர் பிரிவில் ஒடிசா வாரியர்ஸ் அணியும் சாம்பியன் பட்டம் வென்றன. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தொடரில் பங்கேற்க வீரர், வீராங்கனைகள் தங்களது பெயர்களை ஹாக்கி இந்தியா லீக் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆடவர் பிரிவில் இந்தியாவைத் தவிர நெதர்லாந்து, பெல்ஜியம், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஸ்பெயின், அர்ஜென்டினா, அயர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, மலேசியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பதிவு பதிவு செய்யலாம்.

மகளிர் பிரிவில், இந்தியா, நெதர்லாந்து, அர்ஜென்டினா, பெல்ஜியம், சீனா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஸ்பெயின், யுனைடெட் கிங்டம், நியூசிலாந்து, அயர்லாந்து, சிலி, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் பதிவு செய்யத் தகுதியுடையவர்கள். வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி பதிவு செய்ய கடைசி நாளாகும்.

இந்நிலையில் ஹாக்கி இந்தியா லீக் வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி தொடங்கும் என ஹாக்கி இந்தியா கூட்டமைப்பின் செயலாளர் போலா நாத் சிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது, ஹாக்கி இந்தியா லீக்கில் ஆடவர் பிரிவில் 8 அணிகள் தொடரும். ஆனால் மகளிர் பிரிவில் அணிகளின் எண்ணிக்கை 4-ல் இருந்து 6 ஆக அதிகரிக்கப்படும். போட்டியை எங்கு நடத்துவது என்பது குறித்து அணி உரிமையாளர்களுடன் ஆலோசித்து பின்னர் அறிவிப்போம்” என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top