ஆர்சிபி அணியில் ஜிம்பாப்வேயின் முசாராபானி

பெங்களூரு

ஐபிஎல் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்றிருந்த லுங்கி நிகிடி, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளார். இதனால் தென் ஆப்பிரிக்கா சென்ற அவர், ஆர்சிபி அணியுடன் மீண்டும் இணையவில்லை.‘

நடப்பு சீசனில் 12 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 17 புள்ளிகளை குவித்துள்ள ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அந்த அணிக்கு இன்னும் 2 லீக் ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.

இந்நிலையில் பிளே ஆஃப் சுற்றை கருத்தில் கொண்டு லுங்கி நிகிடிக்கு பதிலாக ஜிம்பாப்வேயை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான பிளெஸ்ஸிங் முசாராபானியை ரூ.75 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளது ஆர்சிபி அணி. முசாராபானி, 70 சர்வதேச டி 20 போட்டிகளில் விளையாடி 78 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார். 12 டெஸ்ட் மற்றும் 55 ஒருநாள் போட்டிகளிலும் ஜிம்பாப்வே அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top