வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு !

சென்னை

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் 12 மற்றும் 13 வயது மாணவ, மாணவிகளுக்கு இலவச கோடைகால வாலிபால் பயிற்சி முகாம் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் தொடங்கி நடைபெற்று வந்தது.

பயிற்சி முகாமில் மாணவ, மாணவியருக்கு தினமும் முட்டை, கடலை, மற்றும் ஊட்டச்சத்து பாணம், வாழைப்பழம் வழங்கப்பட்டது. இதன் நிறைவு விழா நேற்று (மே 10) மாலை நடைபெற்றது. இதில் முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் 2 ஜோடி சீறுடைகள் வழங்கப்பட்டன.

இந்த பயிற்சி முகாம் டிஏசி டெவலப்பர்ஸ், 2 குரோ ஹெச்ஆர் நிறுவனம், ரோமா குரூப், காஸ்கோ இந்தியா பிரைவெட் லிமிட்டெட் ஆதரவுடன் நடத்தப்பட்டது.

பயிற்சி முகாம் நிறைவு விழாவில் எஸ்டிஏடி பொது மேலாளார் எல்.சுஜாதா, சர்வதேச வாலிபால் வீரர் துளசி ரெட்டி, எஸ்டிஏடி மேலாளர் மகேஷ்வரி, சென்னை மாவட்ட வாலிபால் சங்க நிர்வாகத் துணைத் தலைவர் பி.ஜெகதீசன், துணைத் தலைவர் ஏ.தினகர், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் பொருளாளர் ஏ.பழனியப்பன், செயலாளர் சி.ஸ்ரீகேசவன், துணைச் செயலாளர் ஏ.பாக்யராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top