சென்னை
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று (ஏப்ரல் 30) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கேவை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி. 191 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 41 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 72 ரன்களும் பிரப்சிம்ரன் 36 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 54 ரன்களும் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். பஞ்சாப் அணிக்கு இது 6வது வெற்றியாக அமைந்தது.
10 ஆட்டங்களில் விளையாடி உள்ள பஞ்சாப் அணி 13 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறியது. அதேவேளையில் இந்த தோல்வியால் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
இந்நிலையில் சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.

