சிஎஸ்கே – ஹைதராபாத் போட்டிக்கு நாளை முதல் டிக்கெட் விற்பனை

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே) 7 போட்டிகளில் விளையாடி 5 தோல்வி மற்றும் 2 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் எஞ்சிய ஆட்டங்களில் கணிசமான வெற்றிகளை குவித்தாக வேண்டும் என்ற நெருக்கடியில் சிஎஸ்கே உள்ளது.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 20) இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சிஎஸ்கே மோத உள்ளது. இதைத் தொடர்ந்து வரும் 25ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை நாளை (ஏப்பரல் 21) காலை 10.153-க்கு https://www.district.in/events/ipl-ticket-booking இணையதளம் வாயிலாக நடைபெறுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top