அக்சர் படேலுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

புதுடெல்லி

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. 206 ரன்கள் இலக்கை விரட்டிய டெல்லி அணி 19 ஓவர்களில் 193 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் டெல்லி அணி பந்துவீச அதிகம் நேரம் எடுத்துக்கொண்டதாக நடுவர்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் அணியின் கேப்டன் அக்சர் படேலுக்கு ஐபிஎல் நடத்தை விதி 2.22-ன் கீழ் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நடப்பு சீசனில் டெல்லி அணி முதல் முறையாக டெல்லி அணி தோல்வியை சந்தித்துள்ளது. அந்த அணி 5 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, ஒரு தோல்வியை பதிவு செய்துள்ளது. அக்சர் படேல் பந்து வீச்சில் இதுவரை ஒரு விக்கெட் கைப்பற்றவில்லை. அதேவேளையில் பேட்டிங்கில் 67 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top