சென்னை
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே அணி நடப்பு சீசனில் மோசமாக விளையாடி வருகிறது. அந்த அணி 6 ஆட்டங்களில் 5 தோல்வி, ஒரு வெற்றியை பதிவு செய்து புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தில் இருந்தது. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் 4 புள்ளிகளை பெற்று 10-வது இடத்தில் இருந்து 8-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. அதேவேளையில் ஒரு வெற்றி, 4 தோல்விகளுடன் மும்பை இந்தியன்ஸ் அணி 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனால் 9-வது இடத்தில் இருந்த சிஎஸ்கே கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
