ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதாருக்கு அபராதம்

மும்பை

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதாருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாக கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

இந்த சீசனில் அபராதம் விதிக்கப்பட்டுள்ள 4-வது கேப்டன் ரஜத் பட்டிதார் ஆவார். லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பந்த், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பொறுப்பு கேப்டன் ரியான் பராக் ஆகியோருக்கும் ஓவர்கள் வீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட விவகாரத்தில் ஏற்கெனவே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top