நவ.28ல் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை

சென்னை, மதுரையில் நடைபெறுகிறது

புதுடெல்லி: சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஆடவருக்கான ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட உள்ளது. இந்தத் தொடரை வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை தமிழகத்தின் சென்னை, மதுரையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 2 வாரங்கள் நடைபெறும் இந்த ஹாக்கி தொடரில் 24 அணிகள் சாம்பியன் பட்டம் வெல்ல மோத உள்ளன. ஆடவருக்கான ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடத்தப்படுவது இது 3-வது முறையாகும். இதற்கு முன்னர் 2016-ம் ஆண்டு லக்னோவிலும், 2021-ம் ஆண்டு ஒடிசாவிலும் நடத்தப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top