சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி பேட்டிங் பயிற்சி செய்து வரும் விடியோ சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது.
இந்த விடியோவை ஜார்க்கண்ட் கிரிக்கெட் வாரியமும் சிஎஸ்கே அணியும் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளன. எம்.எஸ்.தோனி (44 வயது) ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார்.
கடந்த சில சீசன்களாகவே முட்டி வலியால் அவதிப்பட்டு வரும் தோனி 2026 சீசனில் விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. தன்னுடைய உடல்நலனைப் பொறுத்தே இந்த முடிவு எடுப்பேன் என அவர் கூறியுள்ளதால், ஐபிஎல் போட்டிகள் தொடங்கினால்தான் இது உறுதியாகும்.
போட்டிகளில் முழுமையாக ஆடாமல், இம்பாக்ட் வீரராக களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சனை எடுத்திருப்பதால் கீப்பிங்கில் தோனி இல்லாவிட்டாலும் பிரச்னை இல்லை என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஏப்ரலில் தொடங்கும் ஐபிஎல் போட்டிகளுக்கு, எம்.எஸ்.தோனி தற்போதே பயிற்சியைத் தொடங்கியுள்ளார்.

