அகமதாபாத்
இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் ஆதரவுடன் நீரஜ் பஜாஜ் மற்றும் விட்டா டானி ஆகியோரை உரிமையாளராக கொண்ட அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் வரும் மே 29 முதல் ஜூன் 15 வரை அகமதாபாத்தில் உள்ள EKA அரினாவில் நடைபெறுகிறது. இந்த தொடரில் கலந்து கொள்ளும் எட்டு அணிகளின் பயிற்சியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
துரோணாச்சார்யா விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த ராமன் சுப்பிரமணியன், சரத் கமல் மற்றும் மணிகா பத்ரா போன்ற நட்சத்திரங்களுக்கு பயிற்சியளித்த ஜெர்மன் நிபுணர் கிறிஸ் ஃபிஃபர், மூத்த பயிற்சியாளர்கள் பாவெல் ரெஹோரெக், ஜூலியன் ஜிரார்ட் மற்றும் முன்னாள் இந்தியாவின் நம்பர் 1 வீரர் ஜூபின் குமார் ஆகியோர் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (UTT) சீசன் 6-ல் பயிற்சியாளர்களாக அறிமுகமாகவுள்ளனர்.
UTT வரலாற்றில் முதல் முறையாக, அணிகள் தங்கள் பயிற்சி ஊழியர்களை அவர்களே தேர்வு செய்ய சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகமாகும் பயிற்சியாளர்களுடன் ஏற்கெனேவ UTT-ல் பயிற்சியாளர்களாக பணியாற்றியுள்ள எலினா டிமினா, பராக் அகர்வால், சுபாஜித் சாஹா, சௌம்யதீப் ராய் மற்றும் சச்சின் ஷெட்டி ஆகியோர் தங்கள் 2-வது பட்டத்தை நோக்கமாகக் கொண்டு களமிறங்குகின்றனர்.
சீசன் 2 சாம்பியன்னான தபாங் டெல்லி டி.டி.சி அணிக்கு பயிற்சியாளராக தமிழகத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் செயல்பட உள்ளார். அவர், 2022-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணிக்கு பயிற்சி அளித்த அனுபவம் கொண்டவர். அவர், பிரான்ஸின் ஜூலியன் ஜிரார்டுடன் இணைந்து டெல்லி அணிக்கு பயிற்சி அளிக்க உள்ளார். அதேவேளையில் அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ் அணியின் பயிற்சியாளராக கிறிஸ் ஃபீஃபர் இணைந்துள்ளார். அவர், 2022 முதல் இந்திய டேபிள் டென்னிஸில் முக்கிய பங்கு வகித்துள்ளார்,
செக் குடியரசின் பாவெல் ரெஹோரெக் ஜெய்ப்பூர் பாட்ரியாட்ஸ் அணியில் பயிற்சியாளராக களமிறங்ககிறார். அவர், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஒரு பயிற்சியாளர் வாழ்க்கையைக் கொண்டுள்ளார். கொல்கத்தா தண்டர்பிளேட்ஸ் அணியில் பயிற்சியாளராக ஜுபின் குமார் அறிமுகமாகிறார். அனுபவமிக்க பயிற்சியாளர்கள் டிமினா, ஷெட்டி மற்றும் வெஸ்னா ஓஜ்ஸ்டர்செக் ஆகியோர் தொடர்ச்சியாக 6-து யுடிடி சீசனுக்குத் திரும்பி, தொடர்ச்சியையும் நிபுணத்துவத்தையும் உறுதி செய்கிறார்கள்.
அணிகள் & பயிற்சியாளர்கள்
அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ்: சோம்நாத் கோஷ்; கிறிஸ் பீஃபர் (ஜெர்மனி)
ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ்: சச்சின் ஷெட்டி; பாவெல் ரெஹோரெக் (செக் குடியரசு)
பிபிஜி புனே ஜாகுவார்ஸ்: சுபாஜித் சாஹா; வெஸ்னா ஓஜ்ஸ்டர்செக் (ஸ்லோவேனியா)
கோவா சேலஞ்சர்ஸ்: பராக் அகர்வால்; எலெனா டிமினா (நெதர்லாந்து)
தபாங் டெல்லி டிடிசி: ராமன் சுப்பிரமணியன்; ஜூலியன் ஜிரார்ட் (பிரான்ஸ்)
யு மும்பா டிடி: ஜே மோடக்; ஜான் மர்பி (அயர்லாந்து)
கொல்கத்தா தண்டர்பிளேட்ஸ்: ஜுபின் குமார்; டோபியாஸ் பெர்க்மன் (ஸ்வீடன்)
சென்னை லயன்ஸ்: சவுமியாதீப் ராய்; ஜோர்ஜ் பிட்ஜிஜியோ (ஜெர்மனி)