இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 358 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் 157.1 ஓவர்களில் 669 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
இதையடுத்து 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி முதல் ஓவரில் 2 விக்கெட்களை பறிகொடுத்தது. இந்த நூற்றாண்டில் முதல் ஓவரிலேயே இந்திய அணி 2 விக்கெட்களை இழப்பது இது 2-வது முறையாகும். கடைசியாக 2014-ம் ஆண்டு ஆக்லாந்தில் நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் முதல் ஓவரில் இந்திய அணி 2 விக்கெட்களை இழந்திருந்தது.